ஈப்போவில் வங்கி ஒன்றில் வாடிக்கையாளரை கத்தி முனையில் கொள்ளையிட்டு தப்பி சென்ற ஆடவர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வங்கியின் பணப்பட்டுவாடா இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்த இரு பெண்களிடம் கத்தி முனையில் தம் கைவரிசையை காட்டிய அந்த நபர், ஒரு பெண்ணிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற காணொலி ஒன்று இன்று வெள்ளிக்கிழமை சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து அந்த சந்தேக பேர்வழி தேடப்பட்டு வருவதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. யஹாயா ஹாசன் தெரிவித்தார்.
போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் இச்சம்பவம் இவ்வாண்டு மே 14 ஆம் தேதி மாலை 5.20 அளவில் ஈப்போவில் உள்ள வங்கி ஒன்றில் நிகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


