Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கெந்திங் ஹைலேண்ட்ஸ் மலை பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கெந்திங் ஹைலேண்ட்ஸ் மலை பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது

Share:

பென்த்தோங், ஏப்ரல் 15-

கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையின் 15.1 ஆவது கிலோமீட்டரில் உள்ள மலைப்பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக, பென்த்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் சைஹாம் மோஹட் கஹார் உறுதிபடுத்தினார்.

நேற்று மாலை மணி 3.40 அளவில் பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து பகாங் போலீஸ் தடயவியல் பிரிவுடன் தனது தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சோதனைக்காக சென்றிருந்தனர்.

உயிரிழந்த நபரின் அடையாளம் காணப்படாத நிலையில், சவப் பரிசோதனைக்காக அவரின் உடல் தெங்க்கு அம்ப்புவான் அப்சான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சைஹாம் மோஹட் தெரிவித்தார்.

சவப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் கிடைக்க பெறும்வரையில் இதுவொரு திடீர் மரணமே என்று வகைப்படுத்தப்பட்டிருப்பதாக சைஹாம் மோஹட் கூறினார்.

பாதிக்கப்பட்ட நபரை குறித்த தகவலறிந்தவர்கள் அருகாமையிலுள்ள போலீஸ் நிலையங்களில் தெரிவிக்கும்படியும் சைஹாம் மோஹட் கேட்டுக்கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்