Georgetown, Relau - வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவரை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு Balik Pulau மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இன்று முதல் ஒரு வாரத்திற்கு மனநல பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் 40 வயது சந்தேகிக்கும் அவ்வாடவர் விசாரணைக்கு உதவுவதற்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக Timur Laut மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Razlam Ab Hamid தெரிவித்தார்.
நேற்று மாலை 5 மணியளவில், சந்தேகிக்கும் அவ்வாடவர் தனது அண்ணனை தொடர்பு கொண்டு இச்சம்பவத்தை அறிவித்ததை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டதாக Timur Laut மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Razlam Ab Hamid தெரிவித்தார்.
முன்னாக, சந்தேகிக்கும் அவ்வாடவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விட்டிருந்ததாகவும் Jalan Perak - வில் மனநல குறித்த சிகிக்சையை பெற்று வந்ததாகவும் Razlam Ab கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட 67 வயது மூதாட்டியின் உடல் சவப் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக Razlam Ab தகவல் அளித்தார்.








