Sep 22, 2026
Thisaigal NewsYouTube
Marudi-யில் 18.7 அடி நீள ராட்சத முதலை பிடிபட்டது - வேட்டைக் குழு சாதனை
தற்போதைய செய்திகள்

Marudi-யில் 18.7 அடி நீள ராட்சத முதலை பிடிபட்டது - வேட்டைக் குழு சாதனை

Share:

மிரி, ஆகஸ்ட்.03-

சரவாக் மாநிலத்தின் Marudi பகுதியில் நேற்று அதிகாலை 18.7 அடி நீளமுடைய ராட்சத ஆண் முதலை ஒன்று பிடிபட்டுள்ளது.

அப்பகுதியில் உரிமம் பெற்ற முதலை வேட்டைக் குழுவினர் இதுவரை பிடித்ததில் இதுவே மிகப் பெரிய முதலையாகும்.

இது குறித்து வேட்டைக் குழு உறுப்பினரான Goh கூறுகையில், கடந்த சனிக்கிழமை Marudi பாலம் அருகே இரை வைத்து இந்த முதலையானது பிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டில் Baram ஆற்றுப் பகுதியில் இக்குழு பிடித்துள்ள 10-வது முதலை இதுவாகும்.

இதற்கு முன்பு, ஆற்றங்கரையில் முதலைகள் நடமாடுவதாக கிராம மக்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதத்தில் ஐந்து முதலைகளும், ஜூலை 18ஆம் தேதி மேலும் நான்கு முதலைகளும் பிடிக்கப்பட்டதாக Goh தெரிவித்துள்ளார்.

Related News