நெகிரி செம்பிலானில் சிரம்பான், ரெம்பாவ், போர்ட்டிக்சன் ஆகிய மூன்று மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று முதல் 24 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படும்.
சுங்கை தெரிப் மற்றும் சவா ராஜா நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதே இதற்குக் காரணம்.
சிரம்பானில் செனாவாங், ராசா, ரஹாங், அம்பாங்கான், சிரம்பான், 2, சிக்காமாட் உள்ளிட்ட பகுதிகளும், ரெம்பாவில் கம்போங் குந்தூர் ஹிலிர் உள்ளிட்ட பகுதிகளும் பாதிக்கப்படும்.
போர்ட்டிக்சனில் லிங்கி, பெங்காலான் கெம்பாஸ் மற்றும் போர்ட்டிக்சன் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.
பராமரிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும், நீர் விநியோகம் கட்டம் கட்டமாக மீண்டும் வழங்கப்படும் என மாநில நீர் விநியோகிப்பு நிறுவனமான சைன்ஸ் (SAINS) தெரிவித்துள்ளது.








