Mar 16, 2026
Thisaigal NewsYouTube
கொக்கி குமார் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது
தற்போதைய செய்திகள்

கொக்கி குமார் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது

Share:

கடந்த ஜனவரி 7 ஆம் தேதி கோலாலம்பூர், ஜிஞ்ஞ்சாங்கில் அந்நியப்பிரஜை ஒருவரை மடக்கி கொள்ளையடித்ததுடன் அவரை அடித்து காயப்படுத்திய கொக்கி குமார் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் இருவரை போலீசார் கைது செய்து இருப்பதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Sukarno Mohd Zahari தெரிவித்தார்.

33, 39 வயதுடைய அந்த இரு நபர்களும் கடந்த ஜனவரி 21, 22 தேதிகளில் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். வெள்ளை நிற காரில் சென்ற இரு நபர்கள், அந்நியப் பிரஜையை மடக்கி இரும்புத் தடியினால் அடித்து காயப்படுத்தியதுடன் அவரிடமிருந்து உடமைகளை கொள்ளையிட்டுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக ACP Sukarno குறிப்பிட்டார்.

Related News