Oct 26, 2026
Thisaigal NewsYouTube

விபத்தில் காயமடைந்த இரு பெண் செய்தியாளர்களுக்கும் பெர்கேசோ உதவி!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விபத்தில் காயமடைந்த இரு பெண் செய்தியாளர்களுக்கும் பெர்கேசோ உதவி!

ஈப்போவில் சாலை விபத்தில் காயமடைந்த இரு பெண் செய்தியாளர்களுக்கும், காயங்களிலிருந்து மீள்வதற்குத் தேவையான மறுவாழ்வு உபகரணங்களை வழங்க சமூக பாதுகாப்பு நிறுவனமான பெர்கேசோ (PERKESO) முன்வந்துள்ளது.

தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் செய்தியாளர் 34 வயது நூர் அஃபிரடினா அர்ஷாட், கழுத்தில் காயமடைந்ததுடன், உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு ஒரு மாதம் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தி நியூ ஸ்ரேட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளேட்டின் செய்தியாளர் ஸாஹாரதுல்ஹாயாட் மாட் அரிஃப் முகத்திலும் இரு கைகளிலும் வீக்கம் ஏற்பட்டதால், வெளிநோயாளியாகச் சிகிச்சை பெற்று மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பில் உள்ளார்.

இருவரும் அதிகாரபூர்வப் பணிக்காகப் பயணம் செய்தபோது விபத்து நிகழ்ந்ததால், இது வேலை தொடர்பான விபத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

காலை 5.45 மணியளவில், தாமான் கிளேடாங் பெர்மாய் அருகிலுள்ள போக்குவரத்து விளக்குச் சந்திப்பில் நின்றிருந்த அவர்களது காரின் பின்புறம் லாரி மோதியது.

துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி, பாகான் டத்தோவில் பங்கேற்கும் அதிகாரபூர்வ நிகழ்ச்சியைச் செய்தியாகச் சேகரிக்க இருவரும் ஈப்போவிலிருந்து சென்று கொண்டிருந்தனர்.

பெர்கேசோ தொடர்ந்து இருவரின் உடல்நிலையையும் கண்காணித்து, உரிய உதவிகளை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →