மறைந்த மக்கள் ஓசை இணை ஆசிரியர் பி.ஆர். ராஜனின் நல்லுடலுக்கு தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் இறுதி மரியாதை செலுத்தியதுடன் அவரின் குடுத்திற்கு தனது அழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
இன்று மதியம் செலாயாங்கில் உள்ள பி.ஆர். ராஜனின் வீட்டிற்கு நேரில் சென்ற துணை அமைச்சர் தியோ நீ சிங், பி.ஆர். ராஜனின் துணைவியார் ஏ. சரஸ்வதி மற்றும் அவர்களின் மூன்று பிள்ளைகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பி.ஆர். ராஜன் ஊடகத் துறைக்கும் நாட்டிற்கும் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என்று தியோ தெரிவித்தார்.
68 வயதான பி.ஆர். ராஜன், மூளையில் ரத்தக் குழாய் வெடித்ததைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை பெற்று, செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்குக் காலமானார்.








