Oct 26, 2026
Thisaigal NewsYouTube

தெலுக் இந்தானில் உணவுச் சுற்றுலாவை ஊக்குவிக்கப் புதிய திட்டம்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தெலுக் இந்தானில் உணவுச் சுற்றுலாவை ஊக்குவிக்கப் புதிய திட்டம்!

தெலுக் இந்தான் நகரின் உணவுப் பாரம்பரியத்தைப் பிரபலப்படுத்தவும், உள்ளூர் வர்த்தகத்தை மேம்படுத்தவும் 20 பக்கங்களைக் கொண்ட உணவுக் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சரும், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ஙா கோர் மிங் மற்றும் பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் ஆகியோர் இணைந்து இத்திட்டத்தை அண்மையில் தொடக்கி வைத்தனர்.

இதில் பங்கேற்கும் உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் முத்திரைகளைச் சேகரித்து, 20 பக்கங்களையும் பூர்த்தி செய்யும் பயணிகள் சிறப்புப் பரிசுகளைப் பெறலாம்.

இதுவரை 18-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன. இதன் மூலம் உள்ளூர் சிறு வணிகர்களுக்கு ஆதரவு அளிப்பதுடன், தெலுக் இந்தானுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →