திரங்கானு மாநிலம், டுங்குன் பகுதியில் கோலா திரெங்கானு – குவாந்தான் சாலையின் 90-வது கிலோமீட்டரில், இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 32 வயதான ஸுல்கிஃப்லி இஷாக், அவரது மனைவி 36 வயதான மனைவி நோர்ஷீலா ஸாலி மற்றும் அவரது 18 வயதான சகோதரர் அலிஃப் ஷுக்ரி இஷாக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முதல் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மூன்றாவது நபர் டுங்குன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று மாலை 5.15 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், எதிர்த் திசையில் வந்த டிஎன்பி நிறுவனத்தின் நான்கு சக்கர வாகனத்தில் இருந்த இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.








