Oct 25, 2026
Thisaigal NewsYouTube

1.16 டன் போதைப்பொருள் பறிமுதல்: தொடர்புடைய நபர்களைக் கைது செய்ய மலேசிய போலீசார் தீவிரம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
1.16 டன் போதைப்பொருள் பறிமுதல்: தொடர்புடைய நபர்களைக் கைது செய்ய மலேசிய போலீசார் தீவிரம்

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாநிலம், தஞ்சோங் பாலாய் அசாஹான் கடற்பகுதியில், செவ்வாய்க்கிழமை எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலில் இருந்து 1.16 டன் கெட்டமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பல நபர்கள் மற்றும் நிறுவனங்களை மலேசிய போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபர்களின் இருப்பிடங்களைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கில் பல நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

விசாரணையில், அந்தக் கப்பலானது ஜோகூர் மாநிலத்திலிருந்து புறப்பட்டு, சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் துறைமுகப் பகுதியில் நின்று விட்டு அந்தமான் கடல் நோக்கிப் பயணித்தது தெரிய வந்துள்ளது.

பின்னர் அங்கு மற்றொரு கப்பலுக்கு போதைப்பொருள் மாற்றப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் நீதிமன்றத்தின் முன் நிறுத்த, இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவோம் என்றும் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →