Oct 25, 2026
Thisaigal NewsYouTube

படிவம் 3 மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: தெலுக் இந்தான் பள்ளித் தலைமை ஆசிரியர் மீது விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
படிவம் 3 மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: தெலுக் இந்தான் பள்ளித் தலைமை ஆசிரியர் மீது விசாரணை

பேராக் மாநிலம், தெலுக் இந்தானில் உள்ள தாய்மொழிப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர், படிவம் 3-ல் பயிலும் மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக், தனது திரேட்ஸ் சமூக ஊடகப் பதிவில் வெளியிட்டுள்ள தகவலில், புகார் தொடர்பாக விசாரணை நடத்த பேராக் மாநிலக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் தற்காலிகமாக பாகான் டத்தோ மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையில் குறுஞ்செய்திகள் மூலம் அம்மாணவிக்குத் தலைமை ஆசிரியர் தொல்லை அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து, மாணவியின் பெற்றோரில் ஒருவர் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்புகார் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →