Oct 25, 2026
Thisaigal NewsYouTube

செராஸில் உணவுக் கடைக்கு வெளியே இளைஞர் சடலமாக மீட்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
செராஸில் உணவுக் கடைக்கு வெளியே இளைஞர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர், செராஸ் பகுதியில் உள்ள உணவுக் கடைக்கு வெளியே, 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார்.

ஜாலான் ஈக்கான் எமாஸ் பகுதியில் உள்ள குடியிருப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ரோஸ்டி டாவுட் கூறுகையில், தகவல் கிடைத்ததும் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சாலாக் செலாத்தான் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், சம்பவ இடத்தில் குற்றச் செயலுக்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், கோலாலம்பூர் மருத்துவமனையைச் சேர்ந்த உதவி மருத்துவ அதிகாரி, அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →