முதற்கட்டமாக, நாளையும் செவ்வாய்க்கிழமையும் பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பவுள்ளனர்.
இது குறித்து ஜோகூர் மாநிலக் கல்வி மற்றும் தகவல் குழுத் தலைவர் டாக்டர் நாகிப் காஸாலி கூறுகையில், மாநிலத்தின் ஆட்சியுரிமை பிரதிநிதியான துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், எஸ்பிஎம் மற்றும் கல்வியாண்டு இறுதித் தேர்வான யுஏஎஸ்ஏ ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த கால அவகாசம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் இரண்டாம் கட்டமாக, புதன்கிழமை முதல் ஜோகூர் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் முழுமையாகச் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அன்றைய காற்றின் தரத்தைப் பொறுத்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் நாகிப் காஸாலி தெரிவித்துள்ளார்.








