Oct 25, 2026
Thisaigal NewsYouTube

வியட்நாமில் 10 மீட்டர் ஆழக் குழியில் விழுந்த மலேசியப் பெண் மீட்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வியட்நாமில் 10 மீட்டர் ஆழக் குழியில் விழுந்த மலேசியப் பெண் மீட்பு

வியட்நாமின் டா லாட் பகுதியில் உள்ள ஹோன் போ மலையில் இன்று காலை மலையேற்றத்தில் ஈடுபட்ட 40 வயது மலேசியப் பெண், கைவிடப்பட்ட சுரங்கப் பகுதியிலிருந்த 10 மீட்டர் ஆழக் குழியில் தவறி விழுந்தார்.

அதிகாலை 5.45 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு காலை 7.15 மணியளவில் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

அவரது வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, லாம் டோங் பொது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், மலைப்பகுதிகளில் மலையேற்றம் மேற்கொள்வோர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், நிலப்பரப்பு மற்றும் ஆபத்துகள் குறித்து அறியாத இடங்களில் தனியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →