மலாக்கா மாநிலத் தேர்தலில், பிகேஆர் சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களில் 7 பேர் புதிய முகங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் கட்சியின் சீர்திருத்தக் கொள்கைகளுக்கு மக்களின் ஆதரவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மலாக்கா மாநில பிகேஆர் கட்சியின் இடைக்காலத் தலைவர் அடாம் அட்லி கூறுகையில், மத்திய அரசில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தக் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை மலாக்கா மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கட்சி தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றார்.
மேலும், தேர்தலில் வெற்றி பெறுவது வேட்பாளர்களின் பெயர் அல்லது தனிப்பட்ட செல்வாக்கை மட்டும் சார்ந்தது அல்ல என்றும், மக்களுடனான உறவு, வலுவான தேர்தல் பிரசாரக் கட்டமைப்பு மற்றும் முன்வைக்கப்படும் திட்டங்கள் ஆகியவையும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பிரசாரக் காலம் முழுவதும் மக்களிடம் தங்களது செய்திகளைத் தெளிவாகக் கொண்டு சேர்ப்பதுடன், சமூகத்தினர் மற்றும் வாக்காளர்களின் நலன்களுக்கு வேட்பாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








