Oct 25, 2026
Thisaigal NewsYouTube

பாயா தெருபோங் நிலச்சரிவு: மண்ணில் புதைந்த மருத்துவர் உடல் மீட்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாயா தெருபோங் நிலச்சரிவு: மண்ணில் புதைந்த மருத்துவர் உடல் மீட்கப்பட்டது

பினாங்கு மாநிலம், பாயா தெருபோங், தாமான் ஶ்ரீ ரம்பாய் பகுதியில் இன்று காலை 8.36 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில், 73 வயதான மருத்துவர் வோங் கார் லின் மண்ணில் புதைந்து உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடலானது மீட்புப் பணியாளர்களால் காலை 11.20 மணியளவில் மீட்கப்பட்டது.

நிலச்சரிவு ஏற்பட்டபோது வீட்டின் மேல்மாடியில் குளித்துக் கொண்டிருந்த அவரது 86 வயது மாமியார் வோங் போ லிம் என்பவரை, அவரது 68 வயது மகள் சாங் மேய் நுவோ எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து இருவரும் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறி உயிர் தப்பியதாகத் தெரிவித்துள்ளனர்.

எனினும், தனது மருமகன் மண்ணில் புதைந்து விட்டதாக வோங் போ லிம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் குறித்து குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பும் அருகிலுள்ள சிறிய கோயில் பகுதியில் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்ததாக அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலச்சரிவைத் தொடர்ந்து, அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுமானம் மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவுக்கான காரணம் குறித்தும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்குப் பின்னால் உள்ள மலைப்பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹோன் வாய் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →