Oct 26, 2026
Thisaigal NewsYouTube

“அரசாங்கத்தில் தலையிடுவது எனது நோக்கமல்ல” – சிலாங்கூர் சுல்தான் விளக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
“அரசாங்கத்தில் தலையிடுவது எனது நோக்கமல்ல” – சிலாங்கூர் சுல்தான் விளக்கம்

சிலாங்கூர் மாநில ஆட்சி தொடர்பாகத் தாம் தெரிவிக்கும் கருத்துகள், விமர்சனங்கள் மற்றும் கவலைகள், மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடும் நோக்கத்தைக் கொண்டவை அல்ல என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்துள்ளார்.

மாறாக, மக்களின் நலனும் வாழ்க்கைத் தரமும் முதன்மையாகக் கவனிக்கப்படுவதை உறுதி செய்யவே இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது ஆட்சியின் 25-ஆம் ஆண்டு நிறைவையொட்டி நேற்று இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெற்ற மாநில விருது வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய சுல்தான், தமது விமர்சனங்களைத் தமக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையிலான மோதலாக மக்கள் கருதக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே தமது கருத்துகளும், அரச அறிவிப்புகளும் சில அரசியல் தலைவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் முழுமையான முடியாட்சியை நடைமுறைப்படுத்த விரும்புவதாகவும் சித்தரிக்கப்படுவது வருத்தமளிப்பதாக சுல்தான் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், ஆட்சியாளராக, மக்களின் நலனையும் சிலாங்கூரின் எதிர்காலத்தையும் பாதுகாப்பது தமது பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
“அரசாங்கத்தில் தலையிடுவது எனது நோக்கமல்ல” – சிலாங்கூர் சு... | Thisaigal News