Oct 25, 2026
Thisaigal NewsYouTube

பணியிட மனநலக் கொள்கையை உருவாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பணியிட மனநலக் கொள்கையை உருவாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

நாடெங்கிலும் பணியிடங்களில் மனநல ஆதரவை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் மனநலச் சேவைகளை எளிதாகப் பெறவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக, பணியிட மனநலக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாகப் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

2026-ஆம் ஆண்டுக்கான தேசிய உலக மனநல மாதக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட், மனிதவள அமைச்சு மற்றும் தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, துறைகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்புடன் கொள்கையைச் செயல்படுத்த விரிவான ஆலோசனைகள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடு முழுவதும் உள்ள 1,116 அரசு சுகாதாரக் கிளினிக்குகள் வாயிலாக மனநலச் சேவைகள் விரிவுபடுத்தப்படுகின்றன.

மருத்துவமனைகள் மற்றும் சமூக அடிப்படையிலான மனநல மையங்களான மெந்தாரி (MENTARI) மூலமாகவும் பொதுமக்களுக்கு ஆதரவு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →