Oct 26, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கிலிருந்து ஹாங்காங் சென்ற பயணியிடம் 2.2 கிலோ கொக்கைன் பறிமுதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கிலிருந்து ஹாங்காங் சென்ற பயணியிடம் 2.2 கிலோ கொக்கைன் பறிமுதல்

பினாங்கிலிருந்து ஹாங்காங் சென்ற 39 வயது சீன நாட்டவரிடம், ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில் 2.2 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 1.3 மில்லியன் ஹாங் காங் டாலர்கள் அதாவது மலேசிய மதிப்பில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 209 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த வியாழக்கிழமை பினாங்கிலிருந்து வந்த 25 வயது சீன நாட்டவர் ஒருவரிடமும் 2 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவங்களை ஹாங்காங் சுங்கத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 39 வயது நபர் மீது போதைப்பொருள் விநியோகம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று வேஸ்ட் கோவ்லூன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹாங்காங் சட்டத்தின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனையுடன் 5 மில்லியன் ஹாங் காங் டாலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →