Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ரோஸ்மாவின் விண்ணப்பம் தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

ரோஸ்மாவின் விண்ணப்பம் தள்ளுபடி

Share:

சரவா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 125 கோடி வெள்ளி பெறுமானமுள்ள சோலார் மின் சக்தித்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பில் தனக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கு மீதான குற்றச்சாட்டை ரத்து செய்வதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் தாக்கல் செய்த வழக்கு மனுவை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

தமக்கு எதிரான குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நடப்பு சட்டத்திற்கு எதிராக சவால் விடுக்கும் வகையில் ரோஸ்மா தொடுத்து இருந்த வழக்கு மனுவை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி ஹனிபாஹ் ஃபரிக்குல்லாஹ் தள்ளுபடி செய்தார்.

Related News