May 21, 2026
Thisaigal NewsYouTube
சுரேந்திரன் கட்சியை விட்டு விலகியது அவரை பொறுத்தது
தற்போதைய செய்திகள்

சுரேந்திரன் கட்சியை விட்டு விலகியது அவரை பொறுத்தது

Share:

பெத்தாலிங் ஜெயா,பிப்.8
பிகேஆர் கட்சியின் முன்னோடி உறுப்பினர்களில் ஒருவரான அதன் முன்னாள் உதவித் தலைவர் N. சுரேந்திரன், கட்சியை விட்டு விலகியிருப்பது அவரின் தனிப்பட்ட உரிமையாகும் என்று கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாடாங் செராய் எம்.பி.யான சுரேந்திரன் பிகேஆர் கட்சியில் தீவிர பங்களிப்பை கொண்டிருக்கவில்லை. எனவே கட்சியை விட்டு விலகுவது என்பது அவரைப் பொறுத்த விஷயமாகும் என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சரான ஃபஹ்மி ஃபட்சில்குறிப்பிட்டார்.

பிகேஆர் கட்சி வாக்குறுதி அளித்ததைப் போல கட்சியில் சீர்திருத்தங்களை அமல்படுத்த தவறிவிட்டதால் கட்சியை விட்டு விலகுவதாக சுரேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஃபஹ்மி ஃபட்சில்கருத்துரைத்தார்.

கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு தீவிர பங்களிப்பை கொண்டிருக்காத ஒருவர், கட்சியில் இருப்பதும், இல்லாததும், அவரின் தனிப்பட்ட விருப்பமாகும் என்று ஃபஹ்மி ஃபட்சில் மேலும் கூறினார்.

Related News