May 22, 2026
Thisaigal NewsYouTube
விபச்சார மையமாக மாறிய தங்கும் விடுதி
தற்போதைய செய்திகள்

விபச்சார மையமாக மாறிய தங்கும் விடுதி

Share:

புடு, ஜாலான் பசார் பாரு - வில் தங்கும் விடுதி ஒன்று கடந்த வாரம் போலீஸ் அதிகாரிகளின் திடீர் சோதனைக்கு பின் மீண்டும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு ஒரு விபச்சார மையமாக தொடக்கம் கண்டுள்ளது.

அதிகமான பெண் விபச்சாரிகள் குறிப்பிடப்பட்ட தங்கும் விடுதியின் முதல் தளத்தில் வாடிக்கையாளர்களுக்காக காத்து கொண்டிரு‌ப்பது அவ்விடத்தில் மேற்கொள்ளபட்ட ஆய்வின் மூலம் தெரியவந்ததாக நிருபர் ஒருவர் கூறினார்.

இப்பகுதி 'jaga air' மூலம் கடுமையாக கட்டுப்படுத்தபட்டிருப்பதுடன் குறிப்பிட்ட வெளிநாட்டினர்கள் வருவதற்க்கும் வெளியேறுவதற்கும் அவர்களின் பாதுகாப்பில் இருப்பதாக நம்பப்படுகின்றது.

கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைவிடப்பட்ட தங்கும் விடுதி அந்நிய பிரஜைகளுக்கு விபச்சார மையமாக கண்டெடுக்கப்பட்டதுடன் 229 ஆண்களும் 34 பெண்களும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News