Jul 28, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பாதுகாவலர் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளவில்லை
தற்போதைய செய்திகள்

முன்னாள் பாதுகாவலர் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளவில்லை

Share:

தெலுக் இந்தான்,பிப்.9
முதலாம் ஆண்டு மாணவியை உடல்ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் பாதுகாவலர் ஒருவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இன்று காலை ஹக்கிம் இந்தான் நுருல் ஃபரீனா சைனால் அபிடின் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 46 வயதுடைய முஹமாட் ரிட்வான் மஹ்முட் குற்றவாளியற்றவர் என்று ஒப்புக் கொண்டார்.

கடந்த ஜனவரி 31 ஆம் தேதி காலை 6:45 மணியளவில் ஹீலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியின் வகுப்பின் முன் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமியிடம் உடல் ரீதியாக பாலியல் செயலில் ஈடுப்பட்டதாக அவர் குற்றம்சாட்டப்பட்டார்.

குற்றச்சாட்டப்பட்ட நபர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017- யின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related News