Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கடத்தப்பட்ட ஆடவர் பிணமாக மீட்பு, நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

கடத்தப்பட்ட ஆடவர் பிணமாக மீட்பு, நால்வர் கைது

Share:

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பூச்சோங், கம்போங் முஹிபா, பி.பி.ஆர் அடுக்குமாடி பொது குடியிருப்புப் பகுதியிலிருந்து கும்பல் ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்ட ஆடவர் ஒருவர், பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

26 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரின் சடலம், நேற்று அதிகாலை 12.30 மணியளவில் பூச்சோங், 14 ஆவது மைல், ஒரு எண்ணெய் நிலையத்திற்கு அருகில் புரோத்தன் ஜென்2 ரக காரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.

அந்த ஆடவரின் உடல் செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சவப்பரிசோதனை நடத்தப்பட்டதில் உடலில் விலா எலும்பு முறிந்து இருப்பதுடன் தலையில் கடும் காயங்களுடன் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக அல்லாவுதீன் மேலும் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஆடவர், தனது சொந்த நண்பர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இதன் தொடர்பில் கிள்ளான் பள்ளத்தாக்குப்பகுதியில் 27 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு நபர்களை போலீசார் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே குற்றப்பதிவுகளை கொண்டுள்ள இவர்கள், கைது செய்யப்படும் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது என்று அல்லாவுதீன் குறிப்பிட்டா்.

கும்பல் ஒன்று தனது மகனை கடத்திச் சென்றது தொடர்பில் அவரின் தந்தை கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் புக்கிட் ஜாலில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக அல்லாவுதீன் தெரிவித்துள்ளார்.

Related News