10 ஆண்டு காலத்திற்கு, வாகன ஓட்டுனர்கள் தங்களின் லைசென்ஸ்களைப் புதுபித்துக் கொள்ளலாம் என்ற அரசாங்கத்தின் புதிய முடிவு வரவேற்க கூடிய வகையில் இருந்தாலும், அது சாலைப் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்குச் சாதகமாக அமைகின்றது என மலேசிய புத்ரா பல்கலைக்கழக சாலை போக்குவரத்து ஆய்வு மையத்தின் நிபுனர் லோவ் தேக் ஹுவா, கருத்து தெரிவித்துள்ளார். சாலையின் விதிமுறைகளை மீறுபவர்களின் லைசன்ஸ்களைப் போக்குவரத்து இலாகா அவர்கள் மீண்டும் புதுபிக்க தகுயற்றவர்கள் என்ற வரிசையில் பட்டியலிட்டு வந்தது.
அது சாலையில் குற்றம் புரியவர்களுக்கு தண்டணையாக அமைந்ததுடன் தங்களின் தவறான பண்பை மாற்றிக் கொள்ள வாய்ப்பாக இருந்து வந்தது. இந்த 10 ஆண்டு கால லைசன்ஸ் புதுபிக்கும் அரசு முடிவினால் விளையபோகும் பாதங்களைப் போக்குவரத்து அமைச்சு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.








