Jun 8, 2026
Thisaigal NewsYouTube
6 பெண் மாணவிகளுக்குப் பாலியல் அத்துமீறல்: இசை ஆசிரியர் மீது 14 குற்றச்சாட்டுகள்
தற்போதைய செய்திகள்

6 பெண் மாணவிகளுக்குப் பாலியல் அத்துமீறல்: இசை ஆசிரியர் மீது 14 குற்றச்சாட்டுகள்

Share:

சிலாங்கூர், சபாக் பெர்னாமில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியின் 15 வயதுடைய ஆறு மாணவிகளுக்கு எதிராகப் பள்ளி வகுப்பறை, கார் உள்ளிட்ட இடங்களில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 45 வயதான இசை ஆசிரியர் ஒருவர் கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

இடி ஜோஹான் முகமட் ஜோஹ்தி என்ற அந்த இசை ஆசிரியர் மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நீதிபதி ஷரீஃபா ஹாசிந்தி சையத் ஒமர் முன்னிலையில் இக்குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது, அவற்றை மறுத்து அந்த ஆசிரியர் விசாரணை கோரினார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த இசை ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை சபா பெர்னம் வட்டாரத்தில் ஒரு வீட்டிலும், காரிலும் அந்த ஆசிரியர் இக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

6 பேர் பலியான விபத்து: லாரி ஓட்டுநரின் தடுப்புக் காவல் கோரிக்கை நிராகரிப்பு!

6 பேர் பலியான விபத்து: லாரி ஓட்டுநரின் தடுப்புக் காவல் கோரிக்கை நிராகரிப்பு!

கமுந்திங் சிறையில்  மரணம்: முறைகேடுகளை அரசாங்கம்  மூடிமறைக்காது – அமைச்சர் சைஃபுடின் உறுதி

கமுந்திங் சிறையில் மரணம்: முறைகேடுகளை அரசாங்கம் மூடிமறைக்காது – அமைச்சர் சைஃபுடின் உறுதி

 பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: மலேசியா உதவத் தயார் – பிரதமர் அன்வர்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: மலேசியா உதவத் தயார் – பிரதமர் அன்வர்

குலாய் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய திருவிழா கோலாகலம்: ஆலய மேம்பாட்டிற்கு நிதியுதவி வழங்கி வாழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர்!

குலாய் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய திருவிழா கோலாகலம்: ஆலய மேம்பாட்டிற்கு நிதியுதவி வழங்கி வாழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர்!

கோலாலம்பூர் கலைக் கழிவறைகள் திட்டம் அறிமுகம்: பொது இடங்களை அழகுபடுத்த மாநகரமன்றத்துடன் கைகோர்க்கும் தனியார் துறை

கோலாலம்பூர் கலைக் கழிவறைகள் திட்டம் அறிமுகம்: பொது இடங்களை அழகுபடுத்த மாநகரமன்றத்துடன் கைகோர்க்கும் தனியார் துறை

பொது நிதி மோசடி வழக்கு: விரைவில் ஒருவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு

பொது நிதி மோசடி வழக்கு: விரைவில் ஒருவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு