Sep 25, 2026
Thisaigal NewsYouTube
கமுந்திங் சிறையில்  மரணம்: முறைகேடுகளை அரசாங்கம்  மூடிமறைக்காது – அமைச்சர் சைஃபுடின் உறுதி
தற்போதைய செய்திகள்

கமுந்திங் சிறையில் மரணம்: முறைகேடுகளை அரசாங்கம் மூடிமறைக்காது – அமைச்சர் சைஃபுடின் உறுதி

Share:

தைப்பிங், கமுந்திங் சிறைச்சாலை மரண வழக்கில் எவ்வித மூடிமறைப்பும் இல்லை என்று உள்விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதிபடக் கூறியுள்ளார்.

மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகம், கடந்த ஆண்டு நிகழ்ந்த கைதி மரணம் தொடர்பாகப் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட இந்த விவகாரம் குறித்துப் பேசிய சைஃபுடின், "விசாரணையில் முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் யாரையும் அரசு தற்காக்காது; சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்றார்.

கடந்த 2025 ஜனவரி 17 அன்று, கமுந்திங் மையத்திலிருந்து தைப்பிங் சிறைக்கு மாற்றப்பட்ட 62 வயது கைதி கான் சின் எங் மரணமடைந்தார். இது தொடர்பாக ரைண்டி ரின்டி ஓ'நெல் விக்டர் என்ற 25 வயது சிறை வார்டன் மீது மரணத்தை விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிறைகளில் நிலவும் நெரிசல், போதிய ஊழியர்கள் இன்மை, மற்றும் பழமையான உள்கட்டமைப்பு போன்ற முறையான சீர்திருத்தங்கள் தேவை என்பதைச் சுஹாகம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இந்த ஒரு சம்பவத்தால் ஒட்டுமொத்த சிறைத்துறையின் சாதனைகளை மக்கள் தவறாக எடைபோடக் கூடாது என்றும் சைஃபுடின் கேட்டுக்கொண்டார்.

Related News