Sep 25, 2026
Thisaigal NewsYouTube
பொது நிதி மோசடி வழக்கு: விரைவில் ஒருவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பொது நிதி மோசடி வழக்கு: விரைவில் ஒருவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு

Share:

அரசாங்க நிதி முறைகேடு தொடர்பான பரபரப்பான வழக்கின் விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நிறைவு செய்துள்ளதாகவும், இதில் தொடர்புடைய ஒருவர் மீது விரைவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது நம்பிக்கை மீறல் தொடர்பான குற்றவியல் சட்டம் பிரிவு 409-ன் கீழ் மேலதிக நடவடிக்கைக்காக அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்று எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அப்துல் ஹாலிம் அமான் தெரிவித்துள்ளார்.

அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஒப்புதல் அளித்தால், விரைவில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓப் சூத்ரா என்ற விசாரணை நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணை, நிறுவனத்தின் ஒன்றின் மூலம் சில அமைப்புகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட பொது நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டு நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News