Sep 25, 2026
Thisaigal NewsYouTube
பாஸ் - அம்னோ உடன்பாடு இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை - துவான் இப்ராகிம் தகவல்
தற்போதைய செய்திகள்

பாஸ் - அம்னோ உடன்பாடு இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை - துவான் இப்ராகிம் தகவல்

Share:

பாஸ் மற்றும் அம்னோ இடையிலான சாத்தியமான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் இதுவரை எந்த ஒரு உடன்பாடும் எடுக்கப்படவில்லை என அக்கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், ஜொகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநில தேர்தல்கள் போட்டியிடுவது தொடர்பாக, அம்னோ சார்பில் பாஸ் கட்சிக்கு சில தொகுதிகளும் மற்றும் பதவிகள் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களையும் அவர் மறுத்துள்ளார்.

அதேவேளையில், பாஸ் கட்சியானது ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்களில் போட்டியிடுவதைத் தொடரும் என்பதையும் கூபாங் கெரியான் நாடாளுமன்ற உறுப்பினரும், பெரிகாத்தான் நேஷனல் துணைத் தலைவருமான துவான் இப்ராஹிம் துவான் மான் உறுதிப்படுத்தியுள்ளார்.

மாநில தேர்தல்களுக்கான கட்சியின் இயந்திரம் ஏற்கனவே தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், தற்போது போட்டியிட உள்ள தொகுதிகளில் வெற்றி பெறுவதே பாஸ் கட்சியின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News