உலு சிலாங்கூர், புக்கிட் தாகார் பகுதியில் உள்ள துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனத்தின் மழை நீர் சேமிப்புக் குளத்தில், அடைபட்ட வடிகாலைச் சுத்தம் செய்த போது ஏற்பட்ட நீர் சுழலில் சிக்கி 27 மற்றும் 30 வயதுடைய இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கடந்த புதன்கிழமை காலை சுமார் 11 மணியளவில், குளத்தின் நீர் வெளியேறும் அறையில் அடைத்திருந்த குப்பைகளை அகற்றி பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையான ஜேகேகேபி தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவத்தின் போது, வடிகாலில் இருந்த அடைப்பு அகற்றப்பட்டு நீர் மீண்டும் செல்லத் தொடங்கிய போது, சக்திவாய்ந்த நீர் சுழல் உருவாகி இருவரையும் உள்ளே இழுத்துச் சென்றதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களுடன் இருந்த மற்றொரு தொழிலாளி காயமின்றி மீட்கப்பட்டதாக ஜேகேகேபி குறிப்பிட்டுள்ளது.








