நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிகளைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்களில் 22 பேர், கட்சித் தலைமையின் அனைத்து உத்தரவுகளையும், முடிவுகளையும் பின்பற்ற ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த ஒருமித்த முடிவானது, நேற்று இரவு நெகிரி செம்பிலான் விஸ்மா அம்னோவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக மாநில பாரிசான் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலத்தின் அரசியல் நிலைத்தன்மையையும், மக்களின் நலனையும் உறுதிப்படுத்தும் வகையில், தற்போதைய அரசியல் குழப்பத்துக்கு உடனடியாகத் தீர்வு காண்பதே இதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வெளிநாட்டில் இருப்பதால் மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், கூட்டத்தில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும் அவர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக முஹமட் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.








