Nov 21, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கில் அழியும் நிலையில் பாபா நியோன்யா பாரம்பரியம் - முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் கவலை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கில் அழியும் நிலையில் பாபா நியோன்யா பாரம்பரியம் - முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் கவலை

பினாங்கு மாநிலத்தில் பாரம்பரிய பாபா நியோன்யா கலாசாரம் அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் கவலை தெரிவித்துள்ளார்.

பினாங்கு மாநில சீனர் சங்கம் ஏற்பாடு செய்த 37-ஆவது அனைத்துலக பாபா நியோன்யா மாநாட்டை இன்று சனிக்கிழமை தொடக்கி வைத்து உரையாற்றிய அவர், இந்தக் கலாசாரத்தைத் தொடர்ந்து பின்பற்றுவோர் மாநிலத்தில் சுமார் 1,000 பேர் மட்டுமே எஞ்சியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பாரம்பரிய மணிமாலை அலங்காரக் கலை மற்றும் பேச்சு மொழிகள் மறைந்துவிட்டால், அவற்றை அருங்காட்சியகங்கள் மூலமாகக்கூட மீட்டெடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் பெற்றோர் வீட்டில் தங்கள் பாரம்பரிய மொழியைப் பயன்படுத்துவதை நிறுத்தினால், ஒரே தலைமுறையில் அந்த மொழி மறைந்துவிடும் என்றும், பாரம்பரியக் கைவினைக் கலையை அறிந்த கடைசி நபர் அதைக் கைவிடும்போது அந்தக் கலையும் அழிந்துவிடும் என்றும் சாவ் கோன் இயோவ் எச்சரித்துள்ளார்.

இந்தப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது பினாங்கு மக்கள் அனைவரின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கோலா கங்சாரில் 15 வயது மாணவர் மரணம்: முழுமையான விசாரணை நடத்த சிபிஎஸ்எம் வலியுறுத்தல்

கோலா கங்சாரில் 15 வயது மாணவர் மரணம்: முழுமையான விசாரணை நடத்த சிபிஎஸ்எம் வலியுறுத்தல்

புக்கிட் தாகாரில் விபத்து: வடிகால் நீர் சுழலில் சிக்கி இரு தொழிலாளர்கள் பலி

புக்கிட் தாகாரில் விபத்து: வடிகால் நீர் சுழலில் சிக்கி இரு தொழிலாளர்கள் பலி

சிறார்கள் மத்தியில் அதிகரிக்கும் மனநலப் பாதிப்பு, இளவயது கர்ப்பம்: வான் அஸிஸா கவலை

சிறார்கள் மத்தியில் அதிகரிக்கும் மனநலப் பாதிப்பு, இளவயது கர்ப்பம்: வான் அஸிஸா கவலை

நெகிரி செம்பிலான் அரசியல்  நெருக்கடிக்கு முடிவு: கட்சித் தலைமையின் உத்தரவுகளைப் பின்பற்ற உறுப்பினர்கள் ஒப்புதல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முடிவு: கட்சித் தலைமையின் உத்தரவுகளைப் பின்பற்ற உறுப்பினர்கள் ஒப்புதல்

சிலாங்கூர் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு: பேராக் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் குறைந்து வருகின்றது

சிலாங்கூர் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு: பேராக் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் குறைந்து வருகின்றது

34 தொழிற்சாலைகளில் குடிநுழைவுத்துறை அதிரடிச் சோதனை: 519 வெளிநாட்டினர் கைது

34 தொழிற்சாலைகளில் குடிநுழைவுத்துறை அதிரடிச் சோதனை: 519 வெளிநாட்டினர் கைது