Sep 25, 2026
Thisaigal NewsYouTube
மிண்டானோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சபாவில் உணரப்பட்டது
தற்போதைய செய்திகள்

மிண்டானோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சபாவில் உணரப்பட்டது

Share:

பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதியில் இன்று காலை 7.37 மணியளவில், ரிக்டர் அளவுகோலில் 7.9 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு துறையான மெட்மலேசியா அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது பிலிப்பைன்ஸின் கொரோனடால் நகரத்திலிருந்து சுமார் 97 கிலோமீட்டர் தெற்கே, 50 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சபா மாநிலத்திலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தவாவு, செம்பூர்ணா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக அறியப்படுகின்றது.

மேலும், இச்சம்பவத்தை மெட்மலேசியா தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related News