Jun 8, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்த 8 வயது சிறுமி மரணம், 10 வயது சிறுவன் படுகாயம்
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்த 8 வயது சிறுமி மரணம், 10 வயது சிறுவன் படுகாயம்

Share:

ஜோகூர் பாரு, தம்போய், பங்சாபுரி துவி அலிஃப் அவென்யூ பகுதியில் நேற்று காலை அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்ததில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன், 10 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று காலை 7.59 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தை நேரில் கண்ட சில குடியிருப்பாளர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

நீச்சல் குளம் அருகே உலாவிக் கொண்டிருந்த போது திடீரென பெரிய சத்தம் கேட்டதாகவும், பின்னர் சிறுமி அசைவின்றி கிடந்ததை பார்த்து மக்கள் உதவிக்காக அலறியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்த சில நிமிடங்களில் அச்சிறுவனும் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியிடப்படும் என ஜோகூர் பாரு ஜொகூர் பாரு உத்தாரா போலீஸ் தலைவர்ராடின் ரம்லான் ராடின் தாஹா தெரிவித்துள்ளார்.

Related News