கோலாலம்பூர் மாநகரமன்றமான (டிபிகேஎல்), பொதுக் கழிவறைகளை கலை, வடிவமைப்பு மற்றும் பசுமைக் கூறுகளுடன் புதுமையாக மாற்றியமைக்கும் 'கோலாலம்பூர் கலைக் கழிவறைகள்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
'நகரத்தின் கலை' திட்டத்தின் கீழ் உள்ளூர் இளம் கட்டிடக் கலைஞர்களுடன் இணைந்து பிளாசா பாடிக்கில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுடன் கூடிய முதல் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.


இந்தத் திட்டம் ஜாலான் மஸ்ஜித் இந்தியா மற்றும் ஜாலான் சாலாமா ஆகிய இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதில் ஜாலான் சா லோமாவில் அமையவுள்ள கழிவறையின் முழுச் செலவையும் 'பெருனி செராமிக்ஸ்' தனியார் நிறுவனம் ஏற்கவுள்ளது. அரசாங்கமும் தனியார் துறையும் கைகோர்க்கும்போது நகரத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த முடியும் என்று குதராசு பிரதேசத்திற்கான பிரதமர்துறை அமைச்சர் எம்பி ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
மேலும், தெருவோரப் பயன்பாட்டுப் பொருட்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் சுவரோவியங்களை மேம்படுத்தவும் தனியார் துறையுடன் இணைந்து செயல்பட டிபிகேஎல் திட்டமிட்டுள்ளது.










