Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அருள்மிகு ஸ்ரீ மகா அக்னி முனீஸ்வரர் ஆலயத் திருவிழா
தற்போதைய செய்திகள்

அருள்மிகு ஸ்ரீ மகா அக்னி முனீஸ்வரர் ஆலயத் திருவிழா

Share:

கோலாலம்பூர், செந்தூல், லோரோங் திமூர், லோட் 504, ஜாலான் 5, ஒஃப் ஜாலான் செந்துலில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா அக்னி முனீஸ்வரர் ஆலயத்தின் 108 கலசாபிஷேகமும், 21 ஆம் ஆண்டு மஹோத்ஸவ திருவிழாவும் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெறவிருக்கிறது.

கடந்த செப்டம்பர் முதல் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 17 நாட்களுக்கு 108 சங்காபிஷேக மற்றும் விஷேச பூஜைகள் நடைபெற்று வரும் வேளையில் உற்சவத் திருநாளான வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு விக்னேஸ்வர மற்றும் சிறப்பு பூஜைகளுடன் ஆலயத் திருவிழா ஆரம்பமாகிறது.

காலை 9 மணிக்கு பால் குடம் எடுத்தல், தொடர்ந்து மகா அபிஷேகம்,108 கலசாபிஷேகம், விஷேச அலங்கார பூஜை, திருவிழா விஷேச பூஜை ஆகியவற்றுடன் மதியம் மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும்.

இரவு 8.00 மணிக்கு காவடிகள் மற்றும் பிற நேர்த்திக் கடன்கள் ஆலயம் வந்தடையும். திருவிழா முதல் நாளான செப்டம்பர் 16 ஆம் தேதி சனிக்கிழமை இரவு ஆலய வளாகத்தில் அதிர்ஷ்டக் குலுக்களுடன் கலை இரவு நடைபெறும்.

ஆலயத்தின் இந்த 21 ஆம் ஆண்டு திருவிழாவில் பக்த மெய்யன்பர்கள் அனைவரும் வருகைத் தந்து அருள்மிகு ஸ்ரீ மகா அக்னி முனீஸ்வரர் சுவாமியின் திருவருட்கடாட்சம் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Related News