May 22, 2026
Thisaigal NewsYouTube
இணைய விளையாட்டுகள் வாயிலாக இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் தீவிரவாத கும்பல்கள்
தற்போதைய செய்திகள்

இணைய விளையாட்டுகள் வாயிலாக இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் தீவிரவாத கும்பல்கள்

Share:

கோலாலம்பூர், மே 27-

நடப்பு தொழில்நுட்ப காலத்தில், கைப்பேசி உள்ளிட்ட கையடக் கருவிகளையும் இளம் தலைமுறையினரையும் பிரிக்க முடியாத ஒரு சூழல் நிலவிவருகின்றது.

பசிக்கு சரியாக உண்கிறார்களோ இல்லையோ. ஒரு நொடிபொழுதுகூட, கையடக்க கருவிகளைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை.

அத்தரப்பினரின் அத்தகைய போக்கை குறிவைத்து தீவிரவாத கும்பல்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளன.

குறிப்பாக, இணைய வீடியோ விளையாட்டுகள் வாயிலாக, இன்றைய இளம் தலைமுறையினரை தீவீரவாத கும்பல்கள் தங்களது இயக்கத்திற்குள் சேர்த்துக்கொண்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக, பயங்கரவாதத்தை துடைத்தொழிக்கும் கிழக்கு ஆசிய வட்டார மையம் - SEARCCT தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தன்மையிலான இணையோ வீடியோ விளையாட்டுகளால் கவந்திழுக்கப்படும் இளைய தலைமுறையினர், பயங்கரவாதத்தை மேன்மையாக கருதுவதோடு, மனிதாபிமானம், உயர்நெறி பண்புகள் முதலானவற்றை இழக்கின்றனர்.

பின்னாளில், அவர்கள் தீவிரவாத கும்பல்களில் இணைய அதுவே வழிகோலுகின்றது. வருங்காலத்தில், நாட்டின் பாதுகாப்புக்கு அது பெரும் மருட்டலை வழங்கும் என்பதால் பெற்றோர் உள்பட அனைத்து தரப்பினரும் இளம் தலைமுறையினரை அணுக்கமாக கண்காணிக்க வேண்டுமெனவும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Related News