Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கருகி மாண்டனர்

Share:

சுங்கைப்பட்டாணி, கோத்தா கோல மூடா அருகில் ஜாலான் சுங்கை எமாஸ் ஸில் கடை வீடு ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கருகி மாண்டனர். இச்சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் நிகழ்ந்தது. துணிக் கடையான அந்த கடை வீட்டில், தீ சூழ்ந்து கொண்ட வேளையில் மூவரும் தப்பிக்க இயலாமல் தீயின் ஜுவாலைக்குள் சிக்கியதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர், நாலா புறமும் தீயை கட்டுப்படுத்திய பின்னர் இருவரின் கருகிய உடல்களை மீட்ட வேளையில் கடைசியான நபரின் உடல் இன்று காலை 10.15 மணியளவில் மீட்கப்பட்டது.

61 வயது லீ சியு ஃபோங், அவரின் தாயார் 92 வயது யோங் சிவி லான் ஆகியோரும் மற்றொரு நபரும் உயிரிழந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு இடத்தில் வேறு வாங்கிய போதிலும் வியாபாரத்திற்காக அந்த கடை வீட்டில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Related News