Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பெல்லாவின் கொலை வழக்கு 11 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைப்பு
தற்போதைய செய்திகள்

பெல்லாவின் கொலை வழக்கு 11 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைப்பு

Share:

Tongkang Pechah, Lorong Imam Jailani - யில் உள்ள ஒரு வீட்டில் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி Mila Sharmilah என்கிற Bella -வை கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள Mohammad Haikal Mahfuz-யின் வழக்கு மார்ச் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக Batu Pahat நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்ட 32 வயதுடைய பெல்லாவின் தடயவியல் சோதனை முடிவுகள் தங்களுக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என்று துணை அரசு வழக்கறிஞர் Siti Khalijah Khalid- டின் தலைமையிலான தரப்பு தெரிவித்ததை தொடர்ந்து மாஜிஸ்திரேட் Suhaila Shafi'uddin இத்தீர்ப்பை வழங்கியதாக தெரியவந்துள்ளது.

இவ்வழக்கினை மூவார் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான அனுமதி விண்ணப்பிப்பதற்கு தடயவியல் அறிக்கை மட்டுமே இன்னும் பெறாமல் இருப்பது ஒரு காரணம் என்று Siti Khalijah கூறினார்.

குற்றச்சாட்டப்பட்ட நபரின் தரப்பு வழக்கறிஞரான Syahril Anuar என்பவர் எழுந்து, தேதியை நீதிமன்றத்தில் முன்மொழிந்த போது எதிர் தரப்பிலிருந்து எந்தவொரு ஆட்சேபனையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு