கோலாலம்பூர், ஜூலை.28-
கோலாலம்பூர் மையப் பகுதியில் உள்ள மெர்டேக்கா 118 கோபுரம் ‘மெனாரா மெர்டேக்கா மேபேங்க்’ என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிக உயரமான இந்த 118 அடுக்குக் கோபுரத்தின் முதன்மை வாடகைக்காரராக மேபேங்க் (Maybank) இணைந்துள்ளதை அடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த மே மாதம் தனது தலைமையகத்தை இங்கு மாற்றிய மேபேங்க், இதன் 33 தளங்களை ஆக்கிரமித்து சுமார் 7,000 ஊழியர்களுடன் செயல்படத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், ஜாலான் துன் பேராக் சாலையில் இருந்த வங்கியின் முந்தைய தலைமையகம் 'மெனாரா துன் பேராக்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரு பெயர் மாற்றங்களும் உடனடியாக அமலுக்கு வருகின்றன. பிஎன்பி (PNB) நிறுவனத்திற்குச் சொந்தமான இக்கோபுர வளாகத்தில் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல் மற்றும் கண்காணிப்புத் தளம் ஆகியவை அமைந்துள்ளன.








