Oct 10, 2026
Thisaigal NewsYouTube

வேனை மோதியதில் பெண் காரோட்டி மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வேனை மோதியதில் பெண் காரோட்டி மரணம்

ஜோகூர் பாரு, ஜூன்.16-

மாது ஒருவர் செலுத்திய கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வேனுடன் மோதியதில் அவர் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 6.45 மணியளவில் ஜோகூர்பாரு, பந்தாய் லீடோ கடற்கரைப் பகுதிக்கு அருகில் ஜாலான் ஸ்கூடாய் 4 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

இதில் பெரோடுவா பேஸா காரில் பயணித்த 39 வயது மாது கடுமையானக் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இச்சம்பவம் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏஎஸ்பி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →