Jun 24, 2026
Thisaigal NewsYouTube
தம்பதியர் உயிரிழந்த விபத்து கொலை வழக்காக மாற்றம்
தற்போதைய செய்திகள்

தம்பதியர் உயிரிழந்த விபத்து கொலை வழக்காக மாற்றம்

Share:

கோலாலம்பூர், மே.05-

மதுபோதையில் கார் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் நபரின், வாகனம் மோதியதில், வயதான தம்பதியர் உயிரிழந்த சம்பவம் தற்போது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்படுகிறது.

விபத்திற்குப் பின்னர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 24 வயது ஓட்டுநர், பின்னர், போலீசாரால் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்க பிரிவு தலைவர் ஸம்ஸுரி இசா தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு உதவுவதற்காக அவர் மே 11-ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு தற்போது குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும் ஸம்ஸுரி குறிப்பிட்டுள்ளார்.

Related News