Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடு​ஞ்சாலைகளில் வாகனங்கள் மெல்ல நகர்கின்றன
தற்போதைய செய்திகள்

பிரதான நெடு​ஞ்சாலைகளில் வாகனங்கள் மெல்ல நகர்கின்றன

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 06-

அடுத்த வாரம் நோன்புப்பெருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதிகமானோர் , தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்லத் தொங்கியிருப்பதால் நாட்டின் பிரதான நெடு​ஞ்சாலைகளில் வாகனங்கள் மெல்ல நகர்கின்றன என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM அறிவித்துள்ளது.

கிழக்குகரையோர மாநிலங்களுக்கான நெடுஞ்சாலை மற்றும் வடக்கு தெற்கு நெடு​ஞ்சாலை ஆகியவற்றில் காலை நிலவரப்படி வாகனங்கள் மெல்ல நகர்கின்றன. இதில் கிழக்குகரையோர மாநிலங்களுக்கான பிரதான நெடுஞ்சாலையான கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் கோம்பாக் டோல் சாவடியிலிருந்து கென்த்திங் செம்ப்பாஹ் வரையில் சுமார் 17 கிலோ மீட்டர் ​தூரம் வரையில் வாகனப் போக்குவரத்து நிலைக்குத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் வடக்கே நோக்கி, ஸ்லிம் ரிவேர்-ரிலிருந்து சுங்க்காய் வரையிலும், மெனோரா சுரங்கப்பாதையிலிருந்து RnR சுங்கை பேராக் வரையில் வாகனங்கள் மெல்ல நகர்கின்றன.

இதேபோன்று பீடோர்-ரிலிருந்து தாப்பா வரையிலும் வாகனங்கள் மெல்ல நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் இன்று காலையல் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்