Jul 27, 2026
Thisaigal NewsYouTube
காரில் பிள்ளையை மறந்துவிட்டு சென்ற பெற்றோர்!
தற்போதைய செய்திகள்

காரில் பிள்ளையை மறந்துவிட்டு சென்ற பெற்றோர்!

Share:

ஷா ஆலாம், மார்ச் 19 -

சிலாங்கூர் ஷா அலாமில், கொளுத்தும் வெயிலில் வாகனத்தினுள் இருந்த குழந்தையை மறந்து விட்டு சென்ற பெற்றோரின் செயல் சமூக ஊடகத்தில் பேசுபொருளாகியுள்ளது.

காரின் பின்புறமுள்ள இருக்கையில், 3 வயதுடைய சம்பந்தப்பட்ட குழந்தை உறங்கிக் கொண்டிருந்ததை உணராத அத்தம்பதியர், வீட்டினுள் சென்றுள்ளனர்.

சுமார் 15 நிமிடங்கள் வரை, அந்த பிள்ளை வாகனத்தினுள் இருந்த வேளையில், நல்வினைப் பயனாக வாகனத்தின் கண்ணாடி திறந்த நிலையில் இருந்திருந்தது.

பின்னர், வீட்டிற்கு சென்றதும் தங்களது பிள்ளை உடன் இல்லாததை உணர்ந்துள்ளனர். பதற்றத்திற்குள்ளான அவ்விருவரும் அதன் பிறகே வாகனத்திற்கு சென்று, அவர்களது பிள்ளையை மீட்டனர்.

காரின் கண்ணாடி திறந்திருந்ததால் தன் பிள்ளைக்கு ஏதும் ஆகவில்லை என்றும் எதிர்பாராத அச்சம்பவம் தனக்கு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளதாக கூறி, அவ்வாடவர் டிக்டோக்கில் பதிவேற்றம் செய்திருந்த 41 நிமிட காணொளியில் தெரிவித்திருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்