Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கேபல் கார் திட்டத்திற்கு அங்கீகாரம்
தற்போதைய செய்திகள்

கேபல் கார் திட்டத்திற்கு அங்கீகாரம்

Share:

பினாங்கு மாநிலத்தில் முக்கிய சுற்றுலாத் தளமான புக்கிட் பென்டாரா என்று அழைக்கப்படும் கொடி மலையில் 24 கோடியே 45 லட்சம் வெள்ளி மதிப்பிலான கேபள் கார் திட்ட நிர்மாணிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பெரும் திட்டத்திற்கு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அங்கீகாரம் கிடைத்து இருப்பதாக பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரி கிர் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப ஏஜென்சிகளின் இந்த அங்கீகாரத்தை தொடர்ந்து இதன் கட்டுமானப்பணிகள் தொடர்பாக முடிவெடுப்பதற்கு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பினாங்கு 15 ஆவது சட்டமன்றக்கூட்டத் தொடரில் இன்று உரையாற்றிய போது ஜைரி கிர் ஜோஹாரி இவ்விவரத்தை வெளியிட்டார்.

Related News