Jul 28, 2026
Thisaigal NewsYouTube
நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்

Share:

கோலாலம்பூர்,பிப்.1
போலியான விவரங்களை சமர்பித்து 1.2 மில்லியன் வெள்ளி கோரிக்கை செய்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் நிறுவன உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று மாலை 4 மணியளவில் 50 வயதுடைய அந்நபர் ஜோகூரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான (எஸ்.பி.ஆர்.எம்) கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சந்தேகிக்கும் நபர் கடந்த 2022 ஆம் ஆண்டில் இக்குற்றத்தை புரிந்துள்ளார் என்று நம்பப்படுவதுடன் அந்நிறுவனம் வணிக தயாரிப்புகள், சேவைகள் ஆகியவை குறித்து நிதி திட்டத்திற்காக அவரை வியூக பங்குதாரராக நியமித்திருந்தது.

சம்பந்தப்பட்ட நபர் யாயாசானிடன் தவறான விலைப்பட்டியலை காட்டி கோரிக்கையை முன்வைத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

விசாரணைக்காக இன்று ஷா அலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தடுப்பு காவல் விண்ணப்பம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Related News

நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார் | Thisaigal News