Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் கொலை அனைத்து கோணங்களிலும் விசாரணை
தற்போதைய செய்திகள்

ஆடவர் கொலை அனைத்து கோணங்களிலும் விசாரணை

Share:

ஜோகூர்பாரு,பிப்.8
ஜோகூர்பாரு, ஜாலான் அப்துல்லா தாஹிரில் உள்ள Route 66 இரவு கேளிக்கை மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூரைச் சேர்ந்த 24 வயது ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதற்கான பின்னணி காரணங்களை போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருகின்றனர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.

இக் கொலை நடந்த மறுநாள், தாய்லாந்து , பேங்காக்கிற்கு தப்பிச் சென்ற 30 வயது மதிக்கத்தக்க ஆடவர், தாய்லாந்து போலீசாரின் ஒத்துழைப்புடன் பிடிபட்டு, திரும்ப கூலாய், செனாய் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்ட வரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கமிஷனர் குமார் குறிப்பிட்டார்.

இக்கொலை தொடர்பில் சம்பந்தப்பட்ட சந்தேகப்பேர்வழி உட்பட இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள காரணங்களை போலீசார் அனைத்து கோணங்களிலும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் என்று குமார் தெரிவித்தார்.

Related News