May 22, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணிடம் ஆபாச சேட்டை புரிந்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

பெண்ணிடம் ஆபாச சேட்டை புரிந்த நபர் கைது

Share:

Subang Jaya - வில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் பெண் ஒருவரிடம் ஆண் உறுப்பை காட்டி ஆபாச சேட்டை புரிந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, கடந்த ஜூன் 7 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக Subang Jaya மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Wan Azlan Wan Mamat கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் வந்த அந்நபர் இத்தகைய வக்கிர செயலை புரிந்ததாக Wan Azlan தெரிவித்தார்.

விசாரணையில் அந்நபர் மீது ஏற்கனவே ஒரு குற்றப்பதிவு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, குற்றவியல் சட்டம் 509 ஆவது பிரிவின் கீழ் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக Wan Azlan மேலும் விவரித்தார்.

Related News