Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் ஃபாமி ரெஸா கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் ஃபாமி ரெஸா கைது

கோத்தாகினபாலு, டிச.31-


சபா மாநிலத்தின் 11 ஆவது ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட துன் மூசா அமானை சித்தரிக்கும் வகையில் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டதற்காக சமூகவாதியும், கேலிச்சித்திர ஓவியருமான ஃபாமி ரெஸா தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஃபாமி ரெஸா கைது செய்யப்பட்டதை சபா போலீஸ் ஆணையர் டத்தோ ஜாவ்தே டிகுன் நேற்றிரவு உறுதி செய்துள்ளார். ஃபாமி ரெஸாவிற்கு எதிராக சபா மாநிலத்தில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்ததாக டத்தோ ஜாவ்தே டிகுன் குறிப்பிட்டார்.

துன் மூசா அமான், சபா ஆளுநராக நியமிக்கப்பட்டததைத் தொடர்ந்து லஞ்ச ஊழலை எதிர்த்துப் போராடுவதில் சபா மாநில மக்கள் ஒருமித்த ஆதரவு நல்க வேண்டும் என்ற அந்த கேலிச்சித்திரத்தை ஃபாமி ரெஸா வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →